ரஷ்யாவிற்கு பேரிடி : முக்கிய இராணுவ தொழிற்சாலையை துல்லியமாக தாக்கியது உக்ரைன்
ரஷ்யாவின் "மிக முக்கியமான இராணுவ தொழிற்சாலைகளில் ஒன்றை" உக்ரைனியப் படைகள் தாக்கியுள்ளன என்று ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
"இந்த ஆலை ரஷ்ய ஏவுகணைகளுக்கான மின்னணுவியல் மற்றும் கூறுகளை உற்பத்தி செய்தது. நமது நகரங்கள், நமது கிராமங்கள் மற்றும் பொதுமக்களைத் தாக்கும் ஏவுகணைகள் உற்பத்தி செய்யும் இடம்தான்" என்று அவர் தெரிவித்தார்.
பிரிட்டிஷ் ஏவுகணைகள் மூலம் தாக்குதல்
பிரையன்ஸ்க் எல்லைப் பகுதியில் உள்ள கிரெம்னி எல் ஆலையைத் தாக்க பிரிட்டிஷ் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.

image credit - bbc
பயங்கரவாத ஏவுகணைத் தாக்குதலில்" குறைந்தது ஆறு பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் 42 பேர் காயமடைந்ததாகவும் ரஷ்ய உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஜனாதிபதி விளாடிமிர் புடினின் செய்தித் தொடர்பாளர், "பிரிட்டிஷ் நிபுணர்கள் இல்லாமல் இந்த ஏவுகணைகளை ஏவுவது சாத்தியமற்றது என்பது வெளிப்படையானது" என்று தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |