வெளிநாடொன்றில் அதிக வெப்ப தாக்கம் காரணமாக 6 பேர் பலி!
Philippines
Weather
By Laksi
பிலிப்பைன்சில் அதிக வெப்ப தாக்கம் காரணமாக இந்தாண்டு இதுவரை 6 பேர் உயிரிழந்ததாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சில் கடந்த 3 மாதங்களாகவே வறண்ட வானிலை நிலவி வருகின்றது.
கடுமையான வெயில்
இந்நிலையில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே கடுமையான வெப்ப அலைவீசி வெயில் சுட்டெரிக்கின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மத்திய பிலிப்பைன்ஸ், சோசிச்கசர்கென் மாகாணம் ஆகிய பகுதிகளில் 110 டிகிரி வரை வெயில் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் பாடசாலைகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி