குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களி்ல் உள்ள மாணவர்களுக்கு நற்செய்தி
2026 ஆம் ஆண்டிலும் பாடசாலை மாணவர்களுக்கு பாடாசலை எழுதுபொருட்கள் பெறுவதற்கான கொடுப்பனவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, அஸ்வெசும கொடுப்பனவை பெறும் குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு எழுதுபொருட்களைப் பெறுவதற்காக நலன்புரி நன்மைகள் சபையின் மூலம் ஒரு மாணவனுக்கு ரூ. 6,000 வீதம் குறித்த கொடுப்பனவு வழங்கப்படும்.
2025 ஆம் ஆண்டில் அஸ்வெசும கொடுப்பனவு திட்டத்தில் சேர்க்கப்படாத, ஆனால் கொடுப்பனவுக்கு தகுதியுடைய நாடளாவிய ரீதியாக 300 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளில் படிக்கும் மாணவர்களுக்கும் மேற்படி கொடுப்பனவு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
பிரதமரின் முன்மொழிவு
மேலும், பிரிவெனா மற்றும் சீலமாதா மடங்களில் படிக்கும் சாதாரண மற்றும் துறவி மாணவர்கள் மற்றும் சிறுவர் மேம்பாட்டு மையங்களில் உள்ள பாடசாலைகளில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் மூலம் ஒரு மாணவனுக்கு ரூ. 6,000 கொடுப்பனவை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டில் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |