கனடாவில் 60 ஆண்டுகளாக பரிமாறப்படும் நத்தார் வாழ்த்து! ஆச்சரியத்தில் ஆழ்த்திய சம்பவம்
கனடாவில்(Canada) சுமார் 60 ஆண்டுகளாக மூன்று நண்பர்களுக்கு இடையில் நத்தார் வாழ்த்து அட்டைகள் பரிமாறிக் கொள்ளப்பட்டு வருகின்றமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
1964ஆம் ஆண்டு முதல் இந்த நத்தார் வாழ்த்து அட்டை பரிமாற்றம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கரோல் மற்றும் பொப் காடாஷ் ஆகிய இருவரும் ரிச்சர்ட் சோபார்ட் என்ற நண்பருடன் இவ்வாறு நத்தார் அட்டை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.
வாழ்த்து அட்டை
முதல் ஆண்டில் இந்த நண்பர்களுக்கு இடையில் பரிமாறிக்கொள்ளப்பட்ட வாழ்த்து அட்டைகளே மீண்டும் மீண்டும் பரிமாறிக்கொள்ளப்பட்டு வருகின்றமையே தற்போது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த 60 ஆண்டு காலப்பகுதியில் வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகள் துன்பங்கள் ஏற்பட்ட போதிலும் இழப்புக்களை தாண்டி இந்த நண்பர்களுக்கு இடையில் வாழ்த்து அட்டைகள் பரிமாறக் கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கரோல் மற்றும் பொப் ரெஜினாவைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் சோபர்ட் கல்கரியைச் சோந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |