கடலுக்கு அடியில் ஈரான் புதைத்து வைத்துள்ள தாக்குதல் மைன்கள்!
அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் நீரிணை பகுதியில் ஈரான் 10க்கும் குறைவான கடற்படை மைன்களை மட்டுமே பதித்துள்ளதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஆய்வு நிறுவனம் வெளியிட்ட புதிய அறிக்கை தெரிவித்துள்ளது.
“Institute for the Study of War” என்ற ஆய்வு நிறுவனம் நேற்று(11.03.2026) வெளியிட்ட அறிக்கையில் இதனை கூறியுள்ளது.
அறிக்கையில் மேலும், நீரிணையை பெரிய அளவில் மைன் பதிப்பதற்கான திறன் இருந்தாலும், அதனை செய்ய ஈரான் தயக்கமாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈரானுக்கு பெரிய விளைவு
“நீரிணையில் பெருமளவில் மைன்களை பதிப்பது அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக ஈரானுக்கு பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். அதனால் தான் ஈரான் முழுமையாக அந்த நடவடிக்கையை எடுக்க தயங்குகிறது,.

அதேவேளை, அந்த பகுதியில் ஈரானின் கடற்படை திறன்களை குறைக்கும் நடவடிக்கையாக United States Central Command (CENTCOM) தாக்குதல்கள் மேற்கொண்டுள்ளது.
மார்ச் 10ஆம் திகதி, ஹோர்முஸ் நீரிணை அருகே ஈரானின் 16 மைன் பதிக்கும் கப்பல்கள் அழிக்கப்பட்டதாக CENTCOM அறிவித்தது.
இது வணிகக் கப்பல் போக்குவரத்தை அச்சுறுத்தும் ஈரானின் திறனை குறைப்பதற்கான நடவடிக்கையாக கூறப்பட்டது.
பெரிய அளவில் கடற்படை மைன்கள் பதிக்கப்பட்டால் சர்வதேச கடல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படும். அதனால் ஈரானுக்கே பெரிய பொருளாதாரச் சுமை ஏற்படும். அத்துடன், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் சீனா உடனான அரசியல் உறவுகள் பாதிக்கப்படுவதுடன், ஈராக் நாட்டின் எண்ணெய் சார்ந்த பொருளாதாரத்துக்கும் சேதம் ஏற்படும் அபாயம் காணப்படும் என அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |