சுகாதார அமைச்சுக்கு சொந்தமான பெருந்தொகை வாகனங்கள் மாயம்...!
சுகாதார அமைச்சுக்கு சொந்தமான 679 வெவ்வேறு வாகனங்கள் போதிய தகவல்கள் இன்றி காணாமல் போயுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் வாகன முகாமைத்துவம் தொடர்பில் 2019 ஆம் ஆண்டு தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசேட தணிக்கையிலே இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 679 வாகனங்கள் போதிய தகவல்கள் இன்றி இடம்பெயர்ந்தமை தெரியவந்துள்ளது.
439 வாகனங்கள்
அதில் 240 வாகனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு கணக்காய்வுக்கு அறிவித்துள்ள போதிலும், இதனை உறுதிப்படுத்தும் வகையிலான போதிய தகவல்களை கணக்காய்வுக்கு சமர்ப்பிக்கத் தவறியுள்ளதாக கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.
தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள வருடாந்த கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் சுகாதார அமைச்சின் கணக்காய்வு அவதானிப்புகள் ஏனைய 439 வாகனங்கள் தொடர்பில் நான்கு வருடங்களாக எந்தத் தகவலும் கண்டறியப்படவில்லை என தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |