கடன் உதவியில் 7,500 வீடுகள்..! பிரசன்ன ரணதுங்க நடவடிக்கை
Sri Lankan Peoples
Prasanna Ranatunga
By Kiruththikan
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் குறைந்த வசதிகள் கொண்ட குடியேற்றத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
திறைசேரிக்குச் சுமை ஏற்படுத்தாமல் திட்டங்களைச் செயல்படுத்துவதற்குத் தேவையான நிதியைப் பெறுவதற்கு மாற்று வழிகளைக் கடைப்பிடிக்குமாறும் அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஆசிய உட்கட்டமைப்பு மற்றும் முதலீட்டு வங்கியின் கடன் உதவியுடன் 5,500 வீடுகளை நிர்மாணிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
4,074 அடுக்குமாடிக் குடியிருப்புக்கள்
மேலும், 4,074 அடுக்குமாடிக் குடியிருப்புக்களின் நிர்மாணப் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி