நடுவானில் பறந்து கொண்டிருந்த ஏர் ஏசியா விமானத்தில் சீனப் பெண்களால் பரபரப்பு
கூலாலம்பூரிலிருந்து செங்கடூவுக்குச் சென்ற ஏர் ஏசியா விமானம் நடுவானில் பறந்துக் கொண்டிருந்த போது பயணிகளுக்கிடையில் கடும் மோதல் சூழ்நிலையொன்று ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பான காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் திங்கட்கிழமை மாலை 6.11 மணிக்கு கூலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட மற்றும் 10.13 மணிக்கு செங்கடூ தியன்ஃபூ சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய ஏர்பஸ் A320 விமானத்தில் நிகழ்ந்ததுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், விமானத்தில் பயணித்த பெண்கள் குழுவொன்று, விமானம் இருட்டாக்கப்பட்ட பிறகு கூட மிகுந்த சத்தமாக பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
சரமாரி தாக்குதல்
அவர்களுக்கு முன் இருக்கையில் இருந்த ஒருவர், அமைதியாக இருக்குமாறு கேட்டபோது, வாக்குவாதம் தொடங்கியுள்ளது.
வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறிய நிலையில், பச்சை உடையும் தொப்பியும் அணிந்த ஒரு பெண், முன்னால் இருக்கையில் இருந்த ஆணை சரமாரியாக தாக்குவது காணொளியில் பதிவாகியுள்ளது.
அதன்போது, அந்த ஆண் தனது உணவு பரிமாறும் மேசையைத் தற்காப்புக்காக பயன்படுத்தியுள்ளார்.
சீன காவல்துறையினர் விசாரணை
மேலும், ஒரு பெண்ணின் தாயும் வாதத்தில் சேர்ந்ததாகவும், பின்னர் இரண்டு பெண்கள் அந்த நபரை தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், சண்டையை ஆரம்பத்திலேயே சமாளிக்காத விமான ஊழியர்கள் மீதும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, சீன காவல்துறையினர் விமானம் தரையிறங்கியதும் சம்பந்தப்பட்ட பயணிகளை விசாரணை செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, சிச்சுவான் மாகாண பொது பாதுகாப்பு துறை இந்த சம்பவம் குறித்து விசாரணை தொடங்கியுள்தாகவும் யாரும் கைது செய்யப்பட்டார்களா என்ற தகவல்கள் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
