வவுனியா படுகொலை..! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 7 பேர் கைது: விசாரணையில் வெளியாகிய தகவல்

Vavuniya Attempted Murder Sri Lanka Police Investigation
By Kiruththikan Aug 04, 2022 06:18 AM GMT
Report

படுகொலை

வவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டும், வெட்டியும் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 7பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 31ம் திகதி மாலை குறித்த நபரை தேடிச்சென்ற ஆயுதம் தாங்கிய குழுெவான்று அவரைத் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது  அவர் இடியன் துப்பாக்கியால் சுடப்பட்டும், அதன் பின் வாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொலையாளிகளால் இவரது கை வெட்டி எடுத்துச் செல்லப்பட்டு பிறிதொரு இடத்தில் வீசப்பட்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ரஞ்சா என்றழைக்கப்படும் ஜோன்சன் என்ற 30 வயதுடைய இளம் குடும்பஸ்தரே இவ்வாறு படுகொலை செய்யபட்டவராவர்.

குறித்த சம்பவம் தொடர்பில் சிதம்பரபுரம் காவல்துறையினருடன் இணைந்து வவுனியா பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினரும் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 7 பேர் கைது

வவுனியா படுகொலை..! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 7 பேர் கைது: விசாரணையில் வெளியாகிய தகவல் | 7 People Arrested Connection Youth Murder

குறித்த விசாரணைகளையடுத்து தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட இடியன் துப்பாக்கி சிதம்பரபுரம் காவல்துறையினரால் மீட்கப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து வவுனியா பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் 4 வாள்கள், இரத்தம் தோய்ந்த ஆடைகள் என்பன மீட்கப்பட்டுள்ளதுடன், குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீண்ட நாள் பகை காரணமாக தொடர்ச்சியாக  மோதல்கள்

குறித்த இரு குழுவினருக்குமிடையில் ஏற்பட்டிருந்த நீண்ட நாள் பகையும், அதன் காரணமாக அவ்வப்போது இடம்பெற்ற மோதல்களின் தொடர்ச்சியாகவே குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த 7 பேரில் ஒருவர் காயம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் ஏனைய 6 பேரும் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி 

வவுனியாவில் படுகொலை செய்யப்பட்ட இளம் குடும்பஸ்தர் -விசாரணையில் வெளியாகிய தகவல்


ReeCha
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016