நடமாடும் விபசார நிலையம் ; காவல்துறையின் மூலோபாய திட்டம் - 7 பேர் அதிரடி கைது!
நடமாடும் விபசார நிலையத்தை நடாத்திய குற்றச்சாட்டில் அரகலய ஏற்பாட்டாளர் உள்ளிட்ட ஏழு பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அங்குருவாத்தொட ரெமுன பிரதேசத்தில் வைத்து, பாணந்துறை வலான குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில், விபசாரத்தில் ஈடுபடும் பெண்கள் நான்கு பேரும், அவர்களை வாடகை வாகனத்தில் கூட்டிச் செல்லும் சந்தேகநபர்கள் இருவரும் உள்ளடங்குகின்றனர்.
காவல்துறையினரின் திட்டம்
காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், ஒரு மூலோபாய திட்டத்தைக் கையாண்டு 50 ஆயிரம் ரூபாய்க்கு பெண்ணொருவரை காவல்துறையினர் விலைபேசியுள்ளனர்.
இதனடிப்படையில் சந்தேகநபர், சனிக்கிழமை (20) இரவு நான்கு பெண்களை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வந்த சமயம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரதான சந்தேகநபர்
பிரதான சந்தேகநபர், பல வருடங்களாக விபசார வியாபாரத்தை நடத்தி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனுடாக பெருந்தொகை பணத்தை அவர் சம்பாதித்துள்ளமை விசாரணைகளின் ஊடாக தெரிய வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, பிரதான சந்தேகநபர் அரகலயவின் முக்கிய அமைப்பாளராக செயற்பட்ட மொரட்டுவை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 33 வயதானவர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
சமூக வலைத்தளங்களில் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் மேற்படி நபர், குறித்த நடமாடும் விபச்சார நிலையத்தை நடத்தி வந்துள்ளார்.
