சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் நுழைய முயன்ற ஏழு இலங்கையர்கள் கைது!
Sri Lanka
Immigration
Israel
Jordan
By Sathangani
சட்டவிரோதமான முறையில் இஸ்ரேலுக்குள் நுழைய முயன்ற ஏழு இலங்கையர்கள் ஜோர்தானில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் நேற்று (16) எல்லை தாண்டிய வேளையில் கைது செய்யப்பட்டதாக ஜோர்தான் இராணுவ இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
ஜோர்தான் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட ஏழு இலங்கையர்களும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பினைப் பெறுவதற்காக

இஸ்ரேலில் வேலைவாய்ப்பினைப் பெறுவதற்காக ஜோர்தான் - இஸ்ரேல் எல்லையில் அண்மைய ஆண்டுகளில் ஆபிரிக்கா, ஆசியா மற்றும் துருக்கியைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக நுழைந்த பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த வருடம் இஸ்ரேலுக்குள் பிரவேசிக்க முயன்ற 52 பேர் கைது செய்யப்பட்டதாகவும், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 23 பேர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி