விடுமுறையைக் கழிக்க வந்த சிறுவனுக்கு நேர்ந்த துயரம்
கண்டி (Kandy) லூயிஸ் பீரிஸ் மாவத்தையில் உள்ள விடுதி ஒன்றின் நீச்சல் குளத்தில் மூழ்கி 7 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதுடன் அவரது மூத்த சகோதரரும் அதே நீச்சல் குளத்தில் மூழ்கி தீவிர நிலையில் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கண்டி தலைமையக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வரெல்லாகம குருதுகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த மொஹமட் மிஸ்ஜான் என்ற சிறுவனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளது.
விடுமுறையைக் கழிப்பதற்காக இரண்டு குழந்தைகளும் இன்று (28) பெற்றோருடன் இந்த விடுதிக்கு வந்ததாகவும், பிற்பகல் 11.00 மணியளவில் நீச்சல் தடாகத்திற்கு அருகில் தனியாக இருந்த போது நீச்சல் குளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணை
சிறுவன் நீரில் மூழ்குவதைப் பார்த்து, அவரது மூத்த சகோதரர் நீச்சல் குளத்தில் குதித்து தனது தம்பியைக் காப்பாற்ற முயன்றதையடுத்து அவரும் நீரில் மூழ்கியுள்ளார்.

ஆபத்தான நிலையில் இருந்த இளைய சகோதரர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கண்டி தலைமையக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |