தவறிழைத்த மின்சார சபை! வேலையிழக்கப்போகும் 7000 ஊழியர்கள்
தனியார் துறை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிலையங்களில் இருந்து எட்டு மாதங்களாக பெறப்பட்ட மின்சாரத்திற்காக செலுத்த வேண்டிய 23 பில்லியன் ரூபாவை இலங்கை மின்சார சபை செலுத்த தவறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை மின்சார சபை தேசிய மின்கட்டமைப்பிற்கு வழங்கப்படும் மின்சாரத்திற்கான கட்டணத்தை செலுத்த தவறியதன் காரணமாக சிறிய மின் உற்பத்தி நிலையங்கள், சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் காற்றாலைகள் மூடப்படுவதாக உள்ளுர் எரிசக்தி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
கடனை செலுத்தத் தவறிய மின்சார சபை
கடனை செலுத்தத் தவறிய இலங்கை மின்சார சபை இலங்கை மின்சார சபையின் கடனை செலுத்தத் தவறியமையினால் தனியார் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி நிலையங்களில் பணிபுரியும் சுமார் 7000 ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் உள்ளுர் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ருவன் பிரசங்க தெரிவித்துள்ளார்.
