இலங்கையை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : 7ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று

Sri Lanka Sri Lankan Peoples Easter Attack Sri Lanka
By Sathangani Apr 21, 2026 03:22 AM GMT
Report

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 7 ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையில் நாட்டின் அனைத்து தேவாலயங்களிலும் விசேட மத வழிபாடுகளை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இன்று (21) காலை வேளையில் ஒவ்வொரு தேவாலயத்திலும் தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறும் என தேசிய கத்தோலிக்க தொடர்பாடல் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.

இதன்படி, தேவாலயங்களில் மணி ஒலி எழுப்புதல், காலை 8:45 மணிக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துதல், மெழுகுவர்த்தி அல்லது தேங்காய் எண்ணெய் விளக்கேற்றுதல் மற்றும் பிரார்த்தனை வழிபாடுகள் இடம்பெறவுள்ளன.

யாழில் இன்று ஐரோப்பிய தூதுக்குழு...! செம்மணி விவகாரத்தில் சர்வதேசத்தின் அடுத்த கட்ட நகர்வு

யாழில் இன்று ஐரோப்பிய தூதுக்குழு...! செம்மணி விவகாரத்தில் சர்வதேசத்தின் அடுத்த கட்ட நகர்வு

விசேட ஆராதனை

அத்துடன் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் விசேட ஆராதனை நடைபெறவுள்ளது.

இலங்கையை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : 7ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று | 7Th Year Of The Easter Sunday Attacks In Sri Lanka

இதன் காரணமாக அந்த தேவாலயத்தைச் சூழ விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். அதற்கமைய, இன்று காலை 7.00 மணி முதல் ஆராதனைகள் நிறைவடையும் வரை தேவாலயத்தைச் சுற்றியுள்ள வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும், கட்டுவாப்பிட்டி தேவாலயத்திலும் விசேட ஆராதனை நடைபெறவுள்ளதுடன் ஆயர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கும் 'பிரார்த்தனை நடைபவனி' இன்று மாலை 4.00 மணிக்கு நீர்கொழும்பு மாரிஸ்டெல்லா மைதானத்தில் ஆரம்பமாகி, கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியான் தேவாலயத்தை சென்றடையத் திட்டமிடப்பட்டுள்ளது.

குருக்கள்மடம் மனிதப் புதைக்குழி வழக்கு விசாரணை: எஞ்சிய பகுதியை ஸ்கேன் செய்ய நீதிமன்றம் உத்தரவு

குருக்கள்மடம் மனிதப் புதைக்குழி வழக்கு விசாரணை: எஞ்சிய பகுதியை ஸ்கேன் செய்ய நீதிமன்றம் உத்தரவு

தாக்குதலில் உயிரிழந்தவர்கள் 

இலங்கையில் 2019ஆம் ஆண்டு இதேபோன்றதொரு நாளில், உயிர்த்த ஞாயிறு தினத்தில், நாட்டின் பல பகுதிகளில் ஒரே நேரத்தில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் உலகையே அதிர்ச்சியடையச் செய்தன.

இலங்கையை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : 7ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று | 7Th Year Of The Easter Sunday Attacks In Sri Lanka

இந்த தாக்குதல்கள் கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் உள்ள தேவாலயங்களையும், ஐந்து நட்சத்திர விருந்தகங்களையும் குறிவைத்து நடத்தப்பட்ட நிலையில் ஆறு முக்கிய இடங்களில் நிகழ்ந்த இந்த வெடிப்புகளில் சுமார் 269 பேர் உயிரிழந்ததுடன் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்டியன் தேவாலயத்தில் மாத்திரம் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் பல வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதல்களுக்கு பின்னர், தீவிரவாத குழுவாக கருதப்படும் உள்ளூர் அமைப்பு மற்றும் சர்வதேச தீவிரவாத இணைப்புகள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு இதுவரையிலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், உயிரிழந்தவர்களின் நீதிக்கான போராட்டம் 07 ஆண்டுகளாக தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016