தமிழ் அரசியல் கைதிகள் 8 பேருக்கு இன்று விடுதலை
Parliament of Sri Lanka
Charles Nirmalanathan
Sri Lanka Prevention of Terrorism Act
Prisons in Sri Lanka
By Vanan
தமிழ் அரசியல் கைதிகள் எட்டு பேர் அதிபர் பொது மன்னிப்பின் கீழ் இன்று விடுதலை செய்யப்படவுள்ளனர்.
இது குறித்த தகவலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். மேலும் உரையாற்றிய அவர்,
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது
இன்று விடுதலை செய்யப்படும் 08 பேரும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் ஐந்து வருடம் முதல் 200 வருடங்கள் வரை தண்டனை வழங்கப்பட்டவர்கள்.
இவர்களை விடுதலை செய்தமைக்காக அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவிற்கும் நன்றி தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
விடுவிக்கப்படுவோரின் பெயர் விபரம்
- வரதராஜன்
- ரகுபதி சர்மா
- இலங்கேஷ்வரன்
- நவதீபன்
- ராகுலன்
- காந்தன்
- சுதா
- ஜெபநேசன்
