அமெரிக்காவிற்கு எதிராக போரிட தயார் - 800000 வட கொரியர்கள் அதிரடி

United States of America North Korea
By Kiruththikan Mar 19, 2023 07:13 AM GMT
Kiruththikan

Kiruththikan

in சமூகம்
Report

வடகொரியாவின் அரசாங்க பத்திரிக்கையான Rodong Sinmun நேற்று வெளியிட்ட செய்தியில், சுமார் 800,000 வடகொரியர்கள் அந்நாட்டு இராணுவத்தில் இணைந்து அமெரிக்காவுக்கு எதிராக போரிட முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை மாத்திரம் நாடு முழுவதும் 800,000 மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் இராணுவத்தில் இணைவதற்காக முன்வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நமது பொன்னான சோசலிச நாட்டை இல்லாதொழிக்க முயலும் போர் வெறியர்களை இரக்கமின்றி அழித்தொழிக்க வேண்டும் என்ற இளைய தலைமுறையினரின் தளராத விருப்பத்தின் நிரூபணமாக இளைஞர்கள் இராணுவத்தில் சேருவதற்கு ஆர்வம் காட்டுகின்றனர்.

தேசிய மறு ஒருங்கிணைப்பு என்ற மாபெரும் இலக்கை தவறாமல் அடைய முன்வருவது அவர்களின் கடுமையான தேசபக்தியின் தெளிவான வெளிப்பாடாகும் என்று Rodong Xinmun என்ற பத்திரிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

அமெரிக்காவிற்கு எதிராக போரிட தயார் - 800000 வட கொரியர்கள் அதிரடி | 800000 North Korean Ready To Fight Against America

தென் கொரிய மற்றும் அமெரிக்கப் படைகள் கடந்த திங்கட்கிழமை 'ஃப்ரீடம் ஷீல்ட் 23' என்ற 11 நாள் கூட்டுப் பயிற்சியை ஆரம்பித்தன. இதற்குப் பதிலடியாக வட கொரியா கடந்த வியாழனன்று அதன் Hwasong-17 என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை (ICBM) ஏவியது.

அணு ஆயுதங்களை தன்னகத்தே கொண்ட வடகொரியாவை எதிர்ப்பதற்கான வழிகளைப் பற்றி விவாதிப்பதற்கான உச்சிமாநாட்டிற்காக தென் கொரிய அதிபர் டோக்கியோ செல்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னரே வட கொரியா இந்த பரிசோதனையை நடத்தியுள்ளது.

இருப்பினும், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு ஆணையகத்தின் தீர்மானங்களின்படி வட கொரியாவின் பாலிஸ்டிக் ஏவுகணைகள் தடை செய்யப்பட்டுள்ளன.

இந்தநிலையில், வட கொரியாவின் சமீபத்திய ஏவுகணை சோதனை சியோல், வாஷிங்டன் மற்றும் டோக்கியோ அரசாங்கங்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

மீசாலை மேற்கு, சாவகச்சேரி

14 Oct, 2025
30ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, சில்லாலை, எசன், Germany

15 Oct, 1995
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், நல்லூர், Noisy-le-Grand, France

15 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காங்கேசன்துறை, Scarborough, Canada

16 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு, திருகோணமலை

26 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை 2ம் வட்டாரம், வவுனியா

14 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toulouse, France

11 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மல்லாகம், புத்தளம், Melbourne, Australia

11 Oct, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், கொழும்பு, சிட்னி, Australia, Pinner, United Kingdom

08 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சுழிபுரம்

26 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025