IMF விதித்த வழியே 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம்: சாடும் எதிர்கட்சி
2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் IMF விதித்த வழியிலேயே செய்ய செல்லவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று கருத்து தெரிவித்த அவர் IMF-இன் பின்னால் நாடு செல்வது பாரதூரமானது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
கையிருப்பு என்ற கதைகள்
IMF-ஐ வேண்டாம் என ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பாரிய எதிர்ப்பை இநத அரசாங்கம் வெளியிட்டிருந்தது. ஆனால் இன்று என்ன நடந்தது. IMF இல்லை என்றால் எதனையும் இந்த அரசாங்கம் செய்திருக்க முடியாது.

IMF இல்லை என்றால் இந்த அரசாங்கம் வருங்குரோத்தை அடைந்திருக்கும் அல்லவா.
அவர்களின் பின்னணியிலேயே கையிருப்பு இருக்கின்றது என்ற கதைகள் எல்லாம் வருகிறது. அவர்களே இந்த அரசாங்கத்தை நிர்வாகிக்கின்றனர்.
இதன் காரணமாகவே IMF-இல் இருந்து விலகும்படி அழைப்பு விடுக்கின்றோம்.
இதன்படி நாட்டை அபிவிருத்தி செய்வதற்காகவே IMF-தேவையே தவிர நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு செல்வதற்காக அல்ல.
மேலும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் திட்டத்தின் மூலமே இந்த IMFதிட்டங்களை இந்த அரசாங்கம் முன்னெடுக்கிறது. அதை ஒருபோதும் மறுக்க முடியாது” என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |