வெளியான வர்த்தமானி - இன்று முதல் குறைவடையும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள்
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் மீது விதிக்கப்பட்டிருந்த விசேட பண்ட வரிகளை குறைப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான அநுரகுமார திஸாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட 2027 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு திட்டத்தின் ஊடாக, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் மீதான விசேட வர்த்தகப் பண்ட வரி குறைக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், வரி திருத்தங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வரவுள்ளன. இதனால் குறித்த உணவுப் பொருட்களின் விலைகளும் குறைவடையும் என ஜனாதிபதி நேற்று(13) தெரிவித்தார்.
விசேட வர்த்தகப் பண்ட வரி
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பினால் நுகர்வோர் எதிர்கொள்ளும் வாழ்க்கைச் செலவுச் சுமையைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருந்தார்.

இதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் நெத்தலி கிலோகிராம் ஒன்றுக்கு விதிக்கப்பட்டிருந்த 100 ரூபா வரி 10 ரூபாவாகவும், மாசி கிலோகிராம் ஒன்றுக்கு விதிக்கப்பட்டிருந்த 202 ரூபா வரி 10 ரூபாவாகவும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக, தூளாக்கப்பட்ட மற்றும் தூளாக்கப்படாத காய்ந்த மிளகாய் கிலோகிராம் ஒன்றுக்கு விதிக்கப்பட்டிருந்த விசேட பண்ட வரியையும் 50 ரூபாவாகக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |