போதையில் பேருந்து ஓட்டிய சாரதிகளுக்கு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு
ஐஸ் போதைப்பொருளை உட்கொண்ட நிலையில் பேருந்துகளை ஓட்டிய இரண்டு தனியார் பேருந்து சாரதிகளுக்கு கொழும்பு போக்குவரத்து நீதவான் நீதிமன்றம் இன்று (06) 81,000 ரூபா தண்டப்பணமும் ஆறு மாத கடின உழைப்பும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
போதைப்பொருளை பாவித்து பேருந்துகளை ஓட்டியதாக குற்றம் சுமத்தப்பட்ட இந்த இருவருக்கு எதிராக கொழும்பு மாநகர போக்குவரத்து காவல்துறையினர் நீதிமன்றில் இரண்டு வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.
சாரதிகளுக்கு தண்டனை
இலக்கம் NE 7852 என்ற தனியார் பேருந்தின் சாரதி அத்தபட்டா-உ லியனகே, ஹட்பிட்டிய, வதுரகமவைச் சேர்ந்த சந்துன் சம்பத் மற்றும் இலக்கம் NE 1821 என்ற தனியார் பேருந்தின் சாரதியான நிஷாந்த பிரதீப் மல்லவாராச்சி, மினுவாங்கொடை,ஆகிய இருவருக்குமே இந்த தண்டனை விதிக்கப்பட்டது.
சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலை
சாரதிகள் இருவரையும் கைது செய்த பின்னர் சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தியதாகவும் வைத்தியரின் அறிக்கையின் படி அவர்கள் இருவரும் போதைப்பொருள் பயன்படுத்தியமை உறுதி செய்யப்பட்டதாகவும் காவல்துறையினர் நீதிமன்றில் அறிவித்திருந்தனர்.
இதன்படி, சந்தேகநபர்கள் இருவரும் அந்தக் குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொண்ட போதே, இந்தத் தண்டனைகள் விதிக்கப்பட்டன.
