செவ்வந்தி புதைத்து வைத்திருந்த தொலைபேசி மீட்பு! பாதுகாப்பு அமைச்சு வழங்கிய அனுமதி
CID - Sri Lanka Police
Gampaha
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Dilakshan
நேபாளத்தில் கைது செய்யப்பட்டு தீவுக்கு அழைத்து வரப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ கொலையின் பிரதான குற்றவாளியான இஷாரா செவ்வந்தியை 90 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
காவல்துறையினர் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த பின்னர் பாதுகாப்பு அமைச்சு இந்த அனுமதியை வழங்கியுள்ளது.
இதேவேளை, இஷாரா செவ்வந்தி பயன்படுத்திய தொலைப்பேசி கம்பஹா பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில் கொழும்பு குற்றப்பிரிவால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விசாரணை
சந்தேகபரான பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில் தெரியவந்த தகவலின்படி அது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கை விசாரித்து வரும் கொழும்பு மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு, செவ்வந்தியை இன்று விசாரணைக்காக அந்தப் பகுதிக்கு வெளியே அழைத்துச் சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

1ம் ஆண்டு நினைவஞ்சலி