கட்டுநாயக்க விமான நிலையத்தில் சி.ஜ.டியினரிடம் சிக்கிய இளைஞன்!
பொரளை பகுதியில் கொலை முயற்சியொன்றில் ஈடுபட்டு விட்டு நாட்டிலிருந்து தப்பிச் செல்ல கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது, நேற்று (17) இரவு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிறுவப்பட்ட முக அங்கீகார தரவு அமைப்பு மூலம் இந்த சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டதாகவும் அதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா விசாவில் துபாய்
இந்த சந்தேகநபர் பொரளை பகுதியைச் சேர்ந்த 25 வயது இளைஞன் ஆவார்.
இவர், கடந்த ஓகஸ்ட் 22 ஆம் திகதி பொரளை காவல்துறை பிரிவின் கர்தமனாவத்த பகுதியில் ஒருவரை சுட்டுக் கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக தேடப்படும் நபர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சுற்றுலா விசாவில் துபாய்க்கு தப்பி செல்ல முயன்ற வேளை சந்தேகநபர் கைது செய்யப்பட்ட நிலையில் இது குறித்து பொரளை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
