அந்த சகாப்தம் முடிந்து விட்டது! ஜனாதிபதி அநுரவின் அறிவிப்பு
சாதாரண குடிமக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்தவொரு சட்டமும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படாமல் பார்த்துக் கொள்வேன் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார்.
கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நேற்று(17) நடைபெற்ற ஆசிரியர்களுக்கான நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அதன்போது, ஆட்சியாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப சட்டங்களை இயற்றும் மற்றும் அரசியலமைப்புகளை மாற்றும் சகாப்தம் தற்போது முடிவுக்கு வந்துவிட்டதாக அவர் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
தனிப்பட்ட நன்மைக்கான முடிவுகள்
இதன்படி, தனக்கோ அல்லது தனது அமைச்சர்களுக்கோ தனிப்பட்ட நன்மைகளை எதிர்பார்த்து எந்த முடிவும் எடுக்கப்படவோ, எந்த சட்டமூலங்கள் நிறைவேற்றப்படவோ அல்லது திட்டமோ எடுக்கப்படாது என்றும் ஜனாதிபதி அநுர குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், மக்களின் நன்மை மட்டுமே ஒரே நோக்கம்ட என்று கூறிய ஜனாதிபதி, அவநம்பிக்கை அல்லது சந்தேகம் உள்ள பகுதிகளை ஆராய்ந்து அது தொடர்பான முடிவுகளுக்கு ஆதரவாக நிற்குமாறு ஆசிரியர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
