ட்ரம்பிற்கு பலத்த அடி : சட்டவிரோத வரியை திருப்பிச் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு
சட்டவிரோதமாக வசூலித்த வரியை திருப்பிச் செலுத்துமாறு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அரசு நிர்வாகத்திற்கு அமெரிக்க வர்த்தக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இது ட்ரம்ப் நிர்வாகத்திற்கு பெரும் பின்னடைவாக பாரக்கப்படுகிறது.
பல்வேறு நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிப்பு என்ற பெயரில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூடுதல் வரிகளை விதித்தார். இந்த வரி விதிப்புக்கு உலக நாடுகள் மட்டுமின்றி, உள்நாட்டிலும் கடும் எதிர்ப்புகள் வெளியாகின.
வரி விதிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை
இதையடுத்து, பரஸ்பர வரி விதிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என்று கூறி, அமெரிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த நிலையில், சட்டவிரோதமாக மேலதிகமாக வசூலித்த வரியை, இறக்குமதியாளர்களுக்கு வட்டியுடன் திரும்ப செலுத்துமாறு அமெரிக்க அரசு நிர்வாகத்திற்கு வர்த்தக நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதன்மூலம், 11.91 லட்சம் கோடி ரூபாய் திருப்பி செலுத்தப்பட உள்ளது. இது ட்ரம்ப் நிர்வாகத்திற்கு பெரும் பின்னடைவாகும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |