இலக்குகளை அடைந்த பிறகே போரை முடிவுக்கு கொண்டு வருவோம் : ஈரான் அறிவிப்பு
ஈரான் தனது இலக்குகளை அடையும் வரையிலும், அமெரிக்காவிற்கு கடுமையான அடிகளை வழங்கும் வரையிலும் "இந்தப் போரை கைவிடாது" என்று ஈரானிய ஜெனரல் கியோமர்ஸ் ஹெய்டாரி சபதம் செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானின் அரை - அதிகாரப்பூர்வ தஸ்னிம் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்திகளில், கட்டாம் அல்-அன்பியா மத்திய தலைமையகத்தின் துணைத் தளபதி ஹெய்டாரி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தப் போர் எத்தனை நாட்கள் நீடிக்கும் என்பது எங்களுக்கு முக்கியமில்லை. நாங்கள் எட்டு ஆண்டுகால போரை அனுபவித்திருக்கிறோம்.
ஈரானின் அறிவிப்பு
மேலும் எங்கள் இலக்குகளை அடைந்து எதிரியை அதன் அவமானகரமான செயலுக்காக வருத்தப்படவும் விரக்தியடையவும் செய்யும் போது மட்டுமே இந்த போரை முடிவுக்குக் கொண்டுவருவோம்“ என சுட்டிக்காட்டியுள்ளார்.
Deputy Commander of #Iran’s Khatam al-Anbiya Central Headquarters: “The duration of the war does not matter to us. We will only end this conflict once our objectives are met and the enemy is left hopeless and regretful of their shameful actions.” pic.twitter.com/Sx7eFVnvIs
— Iran Nuances (@IranNuances) March 5, 2026
அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தொடர்ந்து ஈரானில் தாக்குதல் நடத்தி வருவதாகவும் கடந்த சனிக்கிழமை முதல் குறைந்தது 1,045 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில் இஸ்ரேலியப் படைகளும் லெபனான் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையைத் தடுப்பதற்கான தீர்மானத்தை அமெரிக்க செனட் 53 : 47 என்ற அடிப்படையில் வாக்களித்து தடுத்து நிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |