சமையல் எரிவாயு விநியோகம் குறித்து மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
அடுத்த வாரம் இலங்கைக்கு வரவுள்ள கப்பல்கள் மூலம் கிடைக்கும் லாஃப்ஸ் எரிவாயுத் தொகையை முதற்கட்டமாக 30 இலட்சம் நுகர்வோருக்கு விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளதாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் டபிள்யூ. கே. எச். வேகபிட்டிய தெரிவித்துள்ளார்.
லாஃப்ஸ் எரிவாயுவை ஏற்றிய இரண்டு கப்பல்கள் அடுத்த வாரம் நாட்டை வந்தடையவுள்ளதாகவும், அவற்றிலிருந்து கிடைக்கும் எரிவாயுவை உடனடியாக நுகர்வோருக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகளவில் நிலவும் மோதல் சூழ்நிலைகள் காரணமாக எரிவாயு இறக்குமதியில் ஏற்பட்டுள்ள பல்வேறு தடைகளே தற்போதைய எரிவாயுத் தட்டுப்பாட்டுக்கு முக்கிய காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எரிவாயுத் தட்டுப்பாடு
மேலும், ஹம்பாந்தோட்டை முனையத்திலிருந்து எரிவாயுவை வெளியிடுவதில் ஏற்பட்ட சில சிக்கல்களும் நாடளாவிய ரீதியில் நிலவும் எரிவாயுத் தட்டுப்பாட்டுக்குக் காரணமாக அமைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரச்சினைக்கு விரைவான தீர்வைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதி மற்றும் திறைசேரியின் செயலாளர் ஆகியோருடன் கலந்துரையாடத் திட்டமிட்டுள்ளதாகவும் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |