அரச ஊழியர்களின் சம்பளத்திற்காக செலவிடப்படும் 900 பில்லியன் ரூபாய் : அமைச்சர் அறிவிப்பு
நாட்டில் உள்ள அரச ஊழியர்களுக்கு சம்பள வழங்குவதற்காக மாத்திரம் தற்போது வருடமொன்றுக்கு சுமார் 900 பில்லியன் ரூபாய் செலவிடப்படுவதாக சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
சுகாதார அமைச்சின் 04 சேவைப் பிரிவுகளின் கீழ் 223 பேருக்கு நியமனங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் உள்ளிட்ட இந்த அனைத்துச் செலவுகளும் இந்நாட்டுப் பொதுமக்கள் செலுத்தும் வரி வருமானத்திலிருந்தே ஈடு செய்யப்படுகின்றன.
சம்பளத் திருத்தங்கள்
பொதுமக்களின் பணம் குறித்துச் சரியான புரிதலுடனும் பொறுப்புடனும் தமது கடமைகளை நிறைவேற்றுவது ஒவ்வொரு அரச ஊழியரதும் பொறுப்பாகும்.

இம்மாதத்துக்குள் ஆரம்ப நிலை சுகாதார அதிகாரிகள் 1600 பேரையும் சுகாதார கட்டமைப்பிற்குள் இணைத்துக்கொள்ளவுள்ள உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன், புதிய நியமனதாரர்களுக்கும் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சம்பளத் திருத்தங்களின் பலன்கள் கிடைக்கப்பெறும்.
2027 ஜனவரி மாதத்தில் அடிப்படைச் சம்பள அதிகரிப்பும், ஜூலை மாதத்திலிருந்து கொடுப்பனவு அதிகரிப்பும் வழங்கப்படவுள்ளது“ என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |