தரக்குறைவான மருந்துகள் தொடர்பில் சுகாதார அமைச்சின் அறிவிப்பு
இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 93 மருந்துகள் தர சோதனைகளில் தோல்வியடைந்துள்ளதாகச் சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தரக்குறைவான மருந்துகளில் பெரும்பாலானவை இந்தியாவிலும் உள்நாட்டிலும் உற்பத்தி செய்யப்பட்டவை என்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மீதமுள்ள மருந்துகள் சீனா, பாகிஸ்தான், ஜப்பான் மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளிலிருந்து நாட்டிற்கு வந்தவை என குறிப்பிடப்படுகின்றது.
600 மருந்துகள் தரக் குறைபாடு
தரமற்றவை என அடையாளம் காணப்பட்ட மருந்துகளில், சில திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும் சில மருந்துகளின் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஒட்டுமொத்தமாக 600 மருந்துகள் தரக் குறைபாடுகள் பதிவாகியுள்ள நிலையில் பொதுமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, அண்மையில் மயக்க மருந்துடன் தொடர்புடைய இரு மரணங்கள் குறித்து விசாரணைகள் நடந்து வருவது இந்த விவகாரத்தை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் தரமற்றதாகக் கண்டறியப்பட்ட சில மருந்துகள் தற்போது சந்தையிலிருந்து முழுமையாக அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
புலம்பெயர்தலின் வழியாக ஈழப் போராட்டத்திற்குத் துணைநின்ற தமிழர்கள்… 1 மணி நேரம் முன்