யாழ்ப்பாணத்தில் இளைஞர் - யுவதிகளை தாக்கும் நோய் : அபாய எச்சரிக்கை விடும் மருத்துவர்
யாழ் போதனா வைத்தியசாலை நீரழிவு சிகிச்சை நிலையமும் யாழ் மருத்துவ பீட சமுதாயம் மற்றும் குடும்பநல மருத்துவத்துறையும் நடாத்துகின்ற நீரிழிவு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வானது எதிர்வரும் 07 திகதி சனிக்கிழமை மாலை 3 மணிக்கு யாழ் மருத்துவ பீடத்தில் நடைபெற இருக்கின்றது.
இவ்வாறு தெரிவித்தார் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையின் நீரிழிவு நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் மகாலிங்கம் அரவிந்தன்.
யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் நீரிழிவு தாக்கம்
இலங்கையில் குறிப்பாக வட மாகாணம் யாழ்ப்பாணத்தில் நீரழிவு தாக்கம் அதிகரித்து செல்வது காணக்கூடியவாறு உள்ளது. அதிலும் குறிப்பாக இளம் யுவதிகள், இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து செல்வது காணக்கூடியவாறு உள்ளது.

கொழும்பு மாவட்டத்திற்கு அடுத்ததாக யாழ் மாவட்டத்தில் நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்கிறது. இது அபாய அறிகுறியாகும்.
உலக மருத்துவ நிறுவனம் அனுசரணை
இத்தருணத்தில் இளைய தலைமுறையை காப்பாற்ற வேண்டிய கடப்பாடு இருக்கின்றது. இந்த நீரிழிவு தொடர்பான விழிப்புணர்வு செயல் அமர்வுக்கு உலக மருத்துவ நிறுவனம் (IMHO) அனுசரணை வழங்குகின்றது.

இந்த நிகழ்வில் பல்வேறு விதமான நிகழ்வுகள் இடம்பெற இருக்கின்றது. உணவுத் திருவிழா ஆரோக்கிய உணவு தொடர்பான பட்டிமன்றம். மருத்துவ மாணவர்கள், மருத்துவர்கள் கலை நிகழ்வு போன்ற விழிப்புணர்வு நிகழ்வுகளும் நடைபெற இருக்கின்றது
என இன்றைய தினம்(03) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தியர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.நிகழ்விற்கு அனுமதி இலவசம் அனைவரையும் அழைத்து நிற்கின்றார்கள்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |