ஏர்பஸ் இரகசியங்களை அம்பலப்படுத்திய ராஜீவவின் மரணம்! அடுக்கப்படும் ராஜபக்சர்களின் ஊழல்

CID - Sri Lanka Police Chamal Rajapaksa Rajapaksa Family
By Dharu Feb 04, 2026 12:16 PM GMT
Report

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் கடந்த 2 ஆம் திகதி பிறப்பித்த சிறிலங்கன் எயர்லைன்ஸிற்காக 10 ஏர்பஸ் விமானங்களை வாங்கியதில் இடம்பெற்ற பெரிய அளவிலான ஊழல் மோசடி தொடர்பான வழக்கில், ராஜபக்ச குடும்பத்தின் மூத்தவரான சமல் ராஜபக்சவின் இளைய மகன் ஷமீந்திர ராஜபக்சவை மூன்றாவது சந்தேகநபராக கைது செய்ய உத்தரவிட்டது.

மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது ஜனாதிபதி ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற மிகப்பெரிய ஊழல் ஒப்பந்தங்களில் ஒன்றாக கருதப்படும் ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகளை தற்போதைய அரசாங்கத்தின் கீழ் மீண்டும் ஆரம்பித்த குற்றப் புலனாய்வுத் துறை (CID), கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அவசர மனுவொன்றை தாக்கல் செய்தது.

இந்த மனுவின் மூலம், முன்னாள் சபாநாயகரும் அமைச்சருமான சமல் ராஜபக்சவின் இரண்டாவது மகன் ஷமீந்திர ராஜபக்சவை வழக்கின் மூன்றாவது சந்தேகநபராக பெயரிடுவதற்கும், தற்போது அமெரிக்காவில் வசிப்பதாக கூறப்படும் அவரை கைது செய்ய பிடியானை பெறுவதற்குமான அனுமதியையும் CID கோரியது.

குறித்த ஊழல் இடம்பெற்ற காலத்தில் ஷமீந்திர ராஜபக்ச சிறிலங்கன் எயர்லைன்ஸின் இயக்குநர் குழு உறுப்பினராக இருந்தார்.

CIDயின் கோரிக்கையின்பேரில், நீதவான் இசுரு நெத்திகுமார ஷமீந்திர ராஜபக்சவை கைது செய்ய பிடியானை பிறப்பித்து, தேவையானால் இன்டர்போலின் உதவியுடன் கைது செய்யுமாறு உத்தரவும் இடப்பட்டது.

சிராந்தியின் 5 மணிநேர வாக்கு மூலம்! NGO நிதியில் வீடு வாங்கிய சுருக்கில் மகிந்த...!

சிராந்தியின் 5 மணிநேர வாக்கு மூலம்! NGO நிதியில் வீடு வாங்கிய சுருக்கில் மகிந்த...!

ஏர்பஸ் ஊழல் என்றால் என்ன

மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது ஜனாதிபதி காலமான 2010 முதல் 2015 வரை, பிரியங்கர ஜயரத்ன சிவில் விமான போக்குவரத்து அமைச்சராக (பெயரளவில்) பதவி வகித்தார்.

ஏர்பஸ் இரகசியங்களை அம்பலப்படுத்திய ராஜீவவின் மரணம்! அடுக்கப்படும் ராஜபக்சர்களின் ஊழல் | Airbus Crime British Case Redherring For Rajapaksa

சிறிலங்கன் எயர்லைன்ஸ் அவரது அமைச்சின் கீழ் இருந்தபோதும், அது முழுமையாக ராஜபக்ச குடும்பத்தின் கட்டுப்பாட்டிலேயே இயங்கியது என ஒரு குற்றச்சாட்டு உள்ளது.

அந்த காலகட்டத்தில் விமான நிறுவனத்தின் இயக்குநர் குழுவில்:

ஷிரந்தி ராஜபக்சவின் சகோதரர் நிஷாந்த விக்ரமசிங்க (தலைவர்),

கபில சந்திரசேன (CEO),

ஜனாதிபதி சட்டத்தரணி நிஹால் ஜயமன்னே,

ஷமீந்திர ராஜபக்ச,

மணிலால் பெர்னாண்டோ,

சனத் உக்குவத்தே,

சுசந்த ரத்னாயக்க,

லக்ஸ்மி சங்கக்கார ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

அமைச்சரவையின் முன் அனுமதி இன்றி (பின்னர் அனுமதி பெறப்பட்ட நிலையில்), பிரான்ஸ் நிறுவனமான ஏர்பஸ்ஸிடமிருந்து ரூ. 290 பில்லியன் மதிப்பில் 12 ஏர்பஸ் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.

துறவறம் பூணுகிறார் கோட்டாபயராஜபக்ச...!

துறவறம் பூணுகிறார் கோட்டாபயராஜபக்ச...!

சமலின் இல்லத்தில்  கூட்டம்

2013 மார்ச் 01 அன்று, நாடாளுமன்றத்திற்கு அருகிலுள்ள முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்சவின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் சிறிலங்கன் எயர்லைன்ஸின் சிறப்பு இயக்குநர் குழு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு இயக்குநர் ஷமீந்திர ராஜபக்ச முழுமையாக நிதியளித்ததாக கூறப்படுகிறது.

இந்த கூட்டத்தில், சிறிலங்கன் எயர்லைன்ஸிற்காக 13 ஏர்பஸ் விமானங்களை குத்தகை அடிப்படையில் வாங்க தீர்மானிக்கப்பட்டது.

பெலவத்தை அலுவலகத்துக்குள் இருந்து ஆட்சி - பொறுக்க முடியாது: நாமல் சீற்றம்

பெலவத்தை அலுவலகத்துக்குள் இருந்து ஆட்சி - பொறுக்க முடியாது: நாமல் சீற்றம்

வெலியமுன ஆணைக்குழு

மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் சிவில் விமான போக்குவரத்து அமைச்சராக இருந்த பிரியங்கர ஜயரத்ன, நல்லாட்சி அரசாங்கம் நியமித்த, மூத்த ஜனாதிபதி சட்டத்தரணி ஜே.சி. வெலியமுன தலைமையிலான ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் சாட்சி அளித்தார்.

ஏர்பஸ் இரகசியங்களை அம்பலப்படுத்திய ராஜீவவின் மரணம்! அடுக்கப்படும் ராஜபக்சர்களின் ஊழல் | Airbus Crime British Case Redherring For Rajapaksa

அவர், “நான் சிவில் விமான போக்குவரத்து அமைச்சராக இருந்தபோதும், சிறிலங்கன் எயர்லைன்ஸின் எந்த இயக்குநர் குழு கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை” என தெரிவித்தார்.

இது விமான நிறுவனத்தின் மீது ராஜபக்ச குடும்பம் எவ்வாறு ஆதிக்கம் செலுத்தியதை வெளிப்படுத்துகிறது.

விசாரணைக்கு சிரிலிய அடையாள அட்டையை எடுத்துச் செல்லாத ஷிரந்தி

விசாரணைக்கு சிரிலிய அடையாள அட்டையை எடுத்துச் செல்லாத ஷிரந்தி

சமல் ராஜபக்சவின் விசித்திரமான பதில்

இந்த கூட்டம் குறித்து முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்சவிடம் வெலியமுன ஆணைக்குழு கேள்வி எழுப்பியபோது,

இதற்கு “என் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இப்படியொரு கூட்டம் நடந்தது எனக்கு தெரியாது” என அவர் பதிலளித்தார்.

இந்த பதிலை விமர்சித்த ராஜீவ் விஜேசிங்கே, மத்திய வங்கி பத்திர மோசடி விசாரணையின் போது அர்ஜுன் அலோசியஸ் தனக்கு வீடு வழங்கியதைத் தெரியாது என ரவி கருணாநாயக்க கூறிய பதிலுடன் இதனை ஒப்பிட்டு கிண்டலாக குறிப்பிட்டிருந்தார்.

கபில சந்திரசேன -  நாமல் ராஜபக்ச

சிறிலங்கன் எயர்லைன்ஸ் CEO கபில சந்திரசேன, ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து விமானங்களை வாங்க ரூ. 16,924.36 மில்லியன் செலுத்தினார்.

ஏர்பஸ் இரகசியங்களை அம்பலப்படுத்திய ராஜீவவின் மரணம்! அடுக்கப்படும் ராஜபக்சர்களின் ஊழல் | Airbus Crime British Case Redherring For Rajapaksa

பின்னர், ஏர்பஸ் நிறுவனம் இலங்கையில் உள்ள இடைநிலையாளர் ஒருவருக்கு 16.4 மில்லியன் டொலர் கமிஷன் வழங்க ஒப்புக்கொண்டது.

அந்த தொகையில் 2 மில்லியன் டொலர், கபில சந்திரசேனின் மனைவி பிரியங்கா விஜேநாயக்கின் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் பல அரச ஒப்பந்தங்களுக்கு நாமல் ராஜபக்ச அனுமதி வழங்கியதாக அனைவரும் அறிந்த ரகசியமாக இருந்து.

அரசு நிறுவனங்களில் வேலை பெறுவதற்குக்கூட பல அமைச்சர்கள் நாமல் ராஜபக்சவை அணுக வேண்டிய நிலை இருந்துள்ளது.

இலங்கையின் எதிர்க்கட்சி தலைவர் யார்? குழப்பத்தில் அயல்நாடு!

இலங்கையின் எதிர்க்கட்சி தலைவர் யார்? குழப்பத்தில் அயல்நாடு!

பிரித்தானிய நீதிமன்றம்

ஏர்பஸ் நிறுவனம் பல நாடுகளில் விமான நிறுவன அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கியமை வெளிப்பட்டதையடுத்து, பிரித்தானிய கிரௌன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

2012ஆம் ஆண்டு புரூனையில் பதிவு செய்யப்பட்ட Biz Solutions Inc. என்ற போலி நிறுவனத்திற்கு ஏர்பஸ் 2 மில்லியன் டொலர் செலுத்தியதும், அந்த பணம் பின்னர் அந்த நிறுவனத்தின் சிங்கப்பூர் கணக்கிற்கு மாற்றப்பட்டதும் விசாரணைகளில் கண்டறியப்பட்டது.

2020ஆம் ஆண்டு வெளியான பிரித்தானிய நீதிமன்ற ஆவணங்களில், சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிர்வாகி ஒருவரின் மனைவி ஏர்பஸ் விமானங்கள் வாங்குவதற்கான முகவராக செயல்பட்டு, 16.4 மில்லியன் டொலர் லஞ்சம் பெற ஒப்புக்கொண்டிருந்தார் என்பது வெளிச்சத்திற்கு வந்தது.

ஏர்பஸ் இரகசியங்களை அம்பலப்படுத்திய ராஜீவவின் மரணம்! அடுக்கப்படும் ராஜபக்சர்களின் ஊழல் | Airbus Crime British Case Redherring For Rajapaksa

இதனைத் தொடர்ந்து, முன்னாள் CEO கபில சந்திரசேனும் அவரது மனைவி பிரியங்கா விஜேநாயக்கும் 2020 பெப்ரவரி 6 அன்று கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

வழக்கமான அலட்சியம்

2016ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் CID முதன்முறையாக இந்த வழக்கை விசாரித்திருந்த போதிலும், கடந்த 10 ஆண்டுகளாக சட்டமா அதிபர் துறையின் அறிவுறுத்தல்கள் தாமதமாகியுள்ளன என CID நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்தது.

ஏர்பஸ் இரகசியங்களை அம்பலப்படுத்திய ராஜீவவின் மரணம்! அடுக்கப்படும் ராஜபக்சர்களின் ஊழல் | Airbus Crime British Case Redherring For Rajapaksa

CID ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக எத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும், சட்டமா அதிபர் துறையின் வழக்கமான தாமதம் மக்களுக்கு நீதி கிடைப்பதை தடுக்கவோ அல்லது குற்றவாளிகள் சட்டத்திலிருந்து தப்பிக்கவோ காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

மகிந்தவை கடவுளாக கருத வேண்டும்: அநுரவுக்கு அர்ச்சுனா அறிவுரை!

மகிந்தவை கடவுளாக கருத வேண்டும்: அநுரவுக்கு அர்ச்சுனா அறிவுரை!

ராஜீவ ஜயவீர கொலை

ராஜீவ ஜயவீர உலகின் பல விமான நிறுவனங்களில் உயர் பதவிகளில் பணியாற்றியவர். ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் அவர் சிறிலங்கன் எயர்லைன்ஸின் நாட்டுப் பிரதிநிதியாக (Country Manager) பணியாற்றினார்.

ராஜபக்ச குடும்பத்தின் இந்த ஊழல் தொடர்புகளை வெளிப்படுத்தி அவர் ஒரு இணையதளத்தில் கட்டுரைகள் எழுதியிருந்தார்.

2020 ஜூன் 12 அன்று காலை 7.00 மணியளவில், கொழும்பு 07, சுதந்திர சதுக்கத்தில் உள்ள ஒரு மரத்தின் கீழ் அவரது உடல் காவல்துறையினரால் கண்டெடுக்கப்பட்டது.

இது, சந்திரசேன தம்பதியர் கைது செய்யப்பட்டு ஐந்து மாதங்கள் கழித்து நடந்த சம்பவமாகும். அப்போது நாட்டில் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தார்.

ஏர்பஸ் இரகசியங்களை அம்பலப்படுத்திய ராஜீவவின் மரணம்! அடுக்கப்படும் ராஜபக்சர்களின் ஊழல் | Airbus Crime British Case Redherring For Rajapaksa

ராஜீவ ஜயவீர தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக்கொண்டதாக செய்துகொண்டதாக காவல்துறை தெரிவித்தது.

அவர் இறப்பதற்கு முன் தனது சகோதரருக்கு எழுதியதாக கூறப்படும் ஒரு “தட்டச்சு செய்யப்பட்ட” கடிதம் இதற்கான காரணமாக முன்வைக்கப்பட்டது.

அந்த கடிதத்தில், அவர் 0.22 கலிபர் ‘மைக்ரோ’ துப்பாக்கியை வாங்கியதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், அவரது தனிப்பட்ட பெட்டியின் PIN எண்ணையும் குறிப்பிட்ட ஒரு குறுந்தகவல் அவரது சகோதரருக்கு அனுப்பப்பட்டிருந்தது.

எனினும் இந்த மரணம் தொடர்பாக காவல்துறை உரிய ஆர்வம் காட்டவில்லை என குற்றம் சுமத்தப்படுகிறது.

பின்னர், சுதந்திர சதுக்கம் மற்றும் அவரது இல்லத்திற்கு அருகிலுள்ள முக்கிய CCTV காட்சிகள் எதுவும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

ராஜீவவின் மரணம் கொலையல்ல, உயிரை மாய்ப்பு என கூறி சினமன் கார்டன் காவல்துறை நீதிமன்றத்தில் குறுந்தகவல்கள் மற்றும் தட்டச்சு செய்யப்பட்ட கடிதத்தை மட்டுமே ஆதாரமாக வழங்கினர்.

வடக்கில் பெரும் சிங்கள குடியேற்றம்! அநுர ஆட்சியில் நனவாகும் மகிந்தவின் கனவு

வடக்கில் பெரும் சிங்கள குடியேற்றம்! அநுர ஆட்சியில் நனவாகும் மகிந்தவின் கனவு

நாமலிடம் விசாரணை 

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, ஏர்பஸ் ஊழல் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன. 2025 மார்ச் மாதத்தில், CID நாமல் ராஜபக்சவிடமிருந்து அறிக்கை பெற நடவடிக்கை எடுத்தது.

ஏர்பஸ் ஒப்பந்தத்தில் கிடைத்த பணம் வேறு கணக்குகளுக்கு மாற்றப்பட்டதா என்பது குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

ராஜபக்ச குடும்பத்திற்கு நெருக்கமான ஒரு தொழிலதிபர், ஏர்பஸ் ஒப்பந்தத்திலிருந்து நாமல் ராஜபக்சவுக்கு வந்த பணத்தை வேறு கணக்குகளுக்கு மாற்ற உதவியதாக CIDக்கு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, அறிவிக்கப்படாத சொத்துக்கள் வைத்திருப்பவர்கள் எல்லாம் தற்போது ராஜபக்ச குடும்பத்தையே குற்றம் சாட்டுவது ஒரு பழக்கமாகிவிட்டதாகவும் கூறப்பட்டது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024