ஷிராந்தியை CIDக்கு அழைத்தமை வரலாற்று சிறப்புமிக்க நாள் : ஆளும் எம்.பி பெருமிதம்
வரலாற்றில் முதல் முறையாக ஷிராந்தி ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் துறைக்கு வந்து வாக்குமூலம் அளித்த இன்று (03) (நேற்று04) ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என்று ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் நஜித் இந்திகா தெரிவித்துள்ளார்.
“இன்று இலங்கைக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி, நிதிக் குற்றப் பிரிவுக்குச் சென்றார். ஆனால் இன்று அவர் ஒரு புலனாய்வு நிறுவனத்திற்குச் சென்று வாக்குமூலம் அளிப்பது முதல் முறை. இது நல்லதல்லவா?
பக்கத்து வீட்டு சபாநாயகரின் இல்லத்தில் வாக்குமூலம்
அவர் முன்பு ஒரு முறை வாக்குமூலம் அளித்தார். அது ஜூன் 1, 2015 அன்று. அந்த வாக்குமூலம் பக்கத்து வீட்டு சபாநாயகரின் அதிகாரபூர்வ இல்லத்தில் வழங்கப்பட்டது.

மேலும், நாமல் ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் துறைக்குச் சென்றிருந்தார். அவரைச் சுற்றி சுமார் ஐம்பது பேர் சூழ்ந்து கொண்டு மிகுந்த வியர்வையுடன் வெளியேறினர்.”என்றார்.
நஜித் இந்திக நேற்று (03) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |