ஜனாதிபதி அநுரவின் பிரான்ஸ் விஜயம் குறித்த சர்ச்சை: வதந்திகளுக்கு அரசு முற்றுப்புள்ளி
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் பிரான்ஸ் விஜயமானது தூதுக்குழுவின் உறுப்பினர் ஒருவருக்கு விசா மறுக்கப்பட்டதன் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகளை அரசாங்கம் மறுத்துள்ளது.
அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இராஜதந்திர பேச்சுவார்த்தை
மேலும் தெரிவித்த அவர், இந்த விஜயத்திற்கான திகதிகள் பிரான்ஸ் மற்றும் இலங்கைக்கு இடையிலான இராஜதந்திர பேச்சுவார்த்தைகளின் பின்னர் அறிவிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்கள் எப்போதும் நம்பகமானவை அல்ல என்று சுட்டிக்காட்டிய அமைச்சர், இவ்வாறான செய்திகளை உருவாக்குபவர்கள் மற்றும் பரப்புபவர்கள் யார் என்பது குறித்து அவதானம் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இரு தரப்பினருக்கும் வசதியான கால அட்டவணை குறித்து இராஜதந்திர மட்டத்தில் உடன்பாடு எட்டப்பட்ட பின்னர் அது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |