நாமலுக்கு அஞ்சுகிறாராம் ஜனாதிபதி அனுர : ஜோன்ஸ்டனின் புதுக்கதை
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர்,நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு மிகவும் அஞ்சுகிறார் என்று முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அனுர குமார திசாநாயக்க தற்போது அந்த அச்சத்தை மறைக்க முடியாத வகையில் நடந்துகொள்கிறார் என்று அவர் குறிப்பிட்டார்.
நாமலுக்கு பெருகும் ஆதரவு
"அந்த அச்சத்தை வைத்துக்கொள்ளுங்கள், கனவான்களே..." என்று கூறிய ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, தற்போது நாமல் ராஜபக்சவுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளுக்கு நகரக் கடைகளிலும் கிராமப் பேருந்துகளிலும் ஒருமித்த கண்டனத்தை சாமானிய மக்கள் கோரி வருவதாகத் தெரிவித்தார்.

இன்றைய சமூகத்தில் நாமல் ராஜபக்சவுக்கு ஆதரவாக உருவாகி வரும் இந்த மாபெரும் மக்கள் போக்கைக் கண்டு எதிர்க்கட்சி அரசியல் குழுக்கள் மிகவும் கவலை கொண்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |