இலங்கைகக்கு ஆபத்தை ஏற்படுத்தப் போகும் பிள்ளையான், சுரேஷ் சலேயின் தடுப்புக் காவல்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் மற்றும் அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் கைது குறித்து முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன கருத்து வெளியிட்டுள்ளார்.
அதன்படி, பிள்ளையான் மற்றும் சுரேஷ் சலே ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டிருப்பது GSP+ சலுகைக்கு இலங்கை தகுதியானதா என்ற மதிப்பீட்டை பாதிக்கக் கூடும் என்று பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரம்
அவர் மேலும் தெரிவிக்கையில், சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் சுரேஷ் சலே உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பது, ஐரோப்பிய ஒன்றியத்துடனான இலங்கையின் GSP+ வர்த்தக சலுகைகளுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடும்.

இலங்கையில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தனி நபர்கள் தடுத்து வைக்கப்படும் சம்பவங்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து கவலைகளை எழுப்பி வருகின்றது. இத்தகைய விவகாரங்களை மனித உரிமைகள் என்ற கண்ணோட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியம் அவதானிக்கின்றது.
இந்த நிலையில், பிள்ளையான் மற்றும் சலே ஆகியோரின் தொடர்ச்சியான தடுப்புக் காவலும், அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரம் மற்றும் மரணங்களும், GSP+ சலுகைக்கு இலங்கை தகுதியானதா என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் மதிப்பீட்டை பாதிக்கக் கூடும்.
இந்த சலுகையை இழப்பது, ஐரோப்பிய சந்தைக்கான இலங்கையின் ஏற்றுமதிகள் மீது, 5 சதவீதம் முதல் 12.5 சதவீதம் அல்லது அதற்கும் அதிகமான கூடுதல் வரிகளை விதிக்க வழிவகுக்கும்“ என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |