உழவு இயந்திரத்தை பழுது பார்த்த இளைஞனுக்கு நேர்ந்த சோகம்..!
Trincomalee
Death
By Sumithiran
திருகோணமலை-தோப்பூர் பகுதியில் உழவு இயந்திரத்தில் சிக்குண்டு இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தில் உயிரிழந்த இளைஞன் தோப்பூர் பகுதியை சேர்ந்த அமீர் அலி அசாத் (17வயது) என காவல்துறையினரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த இளைஞன் உழவு இயந்திரத்தை பழுது பார்த்துக் கொண்டிருந்தபோது அதற்குள் சிக்குண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இளைஞனின் சடலம் தற்பொழுது பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை சேறுநுவர காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி