மட்டக்களப்பில் 6 வயதுடைய சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்!

Batticaloa Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Bavan Sep 04, 2026 05:39 PM GMT
Report

மட்டக்களப்பு நெடியமடு பகுதியில் நீர்ப்பாசன திணைக்களம் ஆற்றின் குறுக்கே பாலம் அமைப்பதற்கு நீர் எடுப்பதற்காக வெட்டிய பாதுகாப்பற்ற குழியில் 6 வயதுடைய சிறுவன் ஒருவர் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (4) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக ஆயித்தியமலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, நெடியமடு பகுதியைச் சேர்ந்த 6 வயதுடைய நாகராசா நவதீப் என்ற சிறுவனே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

உயிரிழப்பு

ஆயித்தியமலை காவல்துறை பிரிவிலுள்ள 6ம் கட்டை என அழைக்கப்படும் நெடியமடு பாடசாலைக்கு எதிர்பக்கம் உன்னிச்சைக் குளத்தில் இருந்து வயலுக்கு செல்லும் ஆற்றின் குறுக்கே பாலம் அமைப்பதற்கு நீர்ப்பாசன திணைக்களம் தண்ணீர் எடுப்பதற்காக குறித்த சிறுவனின் வீட்டு வேலிக்கு அருகில் பாரிய குழி ஒன்றை தோண்டியுள்ளதுடன் அதற்கு பாதுகாப்பு நடவடிக்கை எதையும் மேற்கொள்ளவில்லை.

மட்டக்களப்பில் 6 வயதுடைய சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்! | A 6 Year Old Boy Died After Falling Into A Pit

இந்நிலையில், சம்பவ தினமான இன்று குறித்த சிறுவன் வீட்டின் வேலிக்கு அருகாமையில் நடந்து சென்ற போது வேலிக்கு அருகில் வெட்டிய குழியில் வீழ்ந்துள்ளார்.

அதனைதொடர்ந்து, சிறுவன் மீட்கப்பட்டு கரடியனாறு வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்ட நிலையில் ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை

இதன்படி, பாலம் நிர்மாணம் பணியின் போது அங்கு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளாததால் இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பில் 6 வயதுடைய சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்! | A 6 Year Old Boy Died After Falling Into A Pit 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு மரண விசாரணை அதிகாரி சென்று விசாரணைகளை மேற்கொண்டு உயிரிழந்த சிறுவனின் உடல் பார்வையிட்டு நீதிமன்ற நீதவானுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது டன் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஆயித்தியமலை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20

ReeCha
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026