ஈரானுக்கு எதிராக முக்கிய தீர்மானம்! ஒன்றிணைந்துள்ள பிரபல நாடுகள்
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள், அடுத்த வாரம் ஈரானுக்கு எதிராக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுமாறு சர்வதேச அணுசக்தி முகவர் நிறுவனத்தின் (IAEA) உறுப்பு நாடுகளிடம் வலியுறுத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தீர்மானம், ஈரான் தனது அணுசக்தி தொடர்பான கடமைகளை மீறியதற்காக அதை ஐ.நா. பாதுகாப்பு சபையிடம் சுட்டிக்காட்டும் வகையில் அமையும் என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் போது, அறிவிக்கப்படாத இடங்களில் கண்டறியப்பட்ட யுரேனியம் தடயங்கள் குறித்த விசாரணைகளுக்கு முழுமையாக ஒத்துழைக்காததன் மூலம் ஈரான் தனது கடமைகளை மீறிவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
அணு ஆயுத உற்பத்தி
எவ்வாறாயினும், அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் (NPT) ஒரு தரப்பாக இருப்பதால், ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்க முடியாது; மேலும் தாங்கள் அவ்வாறு செய்யவில்லை என்று பலமுறை கூறியுள்ளது.

Image Credit: Reuters
இருப்பினும், பெப்ரவரியில் போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேலால் குண்டுவீசப்பட்ட யுரேனியம் வசதிகளை ஆய்வு செய்ய IAEA ஊழியர்களை ஈரான் அனுமதிக்கவில்லை என்று சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |