வாக்கு வங்கி உள்ள இடங்களுக்கு மட்டுமே அபிவிருத்தி: மட்டக்களப்பு எம்.பி.க்கள் மீது கடும் குற்றச்சாட்டு
மட்டக்களப்பு நகரை அண்டிய பகுதிகள் மற்றும் கரையோர பிரதேசங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் கடற்றொழிலாளர்களின் நலன் கருதி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் எந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக பேசுவதில்லை எனவும் இந்த விடையத்தில் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈ.பி.டி.பி.கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
ஈழ மக்கள் ஜனநாயக ஊடக மாநாடு இன்று (04-09-2026) இடம்பெற்றது.
அதிக கடற்றொழிலாளர்கள்
இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “மட்டக்களப்பு நகரை அண்டிய பகுதிகள் மற்றும் கரையோர பிரதேசங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் கடற்றொழிலாளர்களின் நலன் கருதி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் எந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக பேசுவதில்லை.

இதனால் மனவேதனை அடைந்துள்ளோம், கிழக்கு மாகாணத்தில் அதிக கடற்றொழிலாளர்களை கொண்ட கடற்றொழிலாளர் சங்கமான பாலமீன்மடு, திராய்மடு கட்றாறழிலாளர் சங்கம் இந்த சங்கம் 1990 ஆம் ஆண்டு ஜனாதிபதி விருதை பெற்ற பெரிய ஒரு சங்கமாகும்.
இவ்வாறான நிலையில் பாலமீன்மடு மீன் சந்தையில் அதிகாலை 6.00 மணியிலிருந்து 7.00 மணிக்குள் 300 மீன்பிடி படகுகள் கட்றறொழிலாளர்ளுடன் தரித்து நின்று வியாபாரத்தில் ஈடுபடும் ஒரு பிரதான தளம்
பல தடவைகள்
இந்த மீன் சந்தை கட்டிடம் இன்று இடிந்து விழும் நிலையில் உள்ளது இது தொடர்பாக பல தடவைகள் மாவட்டத்திலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், கடற்றொழில் திணைக்களம் மற்றும் கடந்த கால ஆட்சியில் அபிவிருத்தி குழு தலைவர் என்ற போர்வையில் இருந்த இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் உட்பட அனைவருக்கும் எழுத்து மூலமாக சங்கம் கோரிக்கையை முன்வைத்தது.
இது தொடர்பாக இதுவரை எந்தவிதமான நடவடிக்கையை எடுக்கவில்லை என மன வேதனையுடன் தெரிவிக்கின்றோம்.

அதேவேளை இன்று நடந்து வரும் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தை ஆரம்பித்து வைப்பதும் அதை முடித்து வைப்பதும் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்தை பரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்.
இவர் இன்று மக்கள் வரிப்பணத்தில் அரசியல் செய்து கொண்டிருக்கிறார், இவருக்கு எங்கெல்லாம் வாக்கு வங்கி இருக்கின்றதே அந்த பிரதேசத்தில் அவரது அதிகாரத்தை பயன்படுத்தி துரிதமாக அபிவிருத்தி செய்து வருகிறார்.
குடியேற்றத் திட்டம்
அவருக்கு வாக்கு வங்கி இல்லாத பிரதேசங்களை அக்கறை செலுத்துவதில்லை. இது மறைமுகமாக அவருக்கு வாக்களித்தால் உங்கள் ஊர்களை அபிவிருத்தி செய்வார் என்ற ஒரு தோற்றப்பாட்டை உருவாக்கும் ஒரு திட்டமாக தான் இதை கருதுகிறேன்.
எனவே இந்த விடையத்தில் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி குழு தலைவருமான கந்தசாமி பிரபு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

அதேவேளை பாலமீன்மடு 60 கடற்றொழிலாளர் குடியேற்றத் திட்டத்தில் உள்ள மக்கள் குடிநீர், மலசல கூடம் மற்றும் மின்சாரம் போன்ற அடிப்படை வசதியின்றி ஓலைக்குடிசையில் நகரை அண்டி வாழ்ந்து வருகின்றனர்.
இது தொடர்பாக இதற்கு முதல் ஊடகங்கள் ஊடாக சுட்டிக்காட்டியிருந்தேன் இன்று வரை அரசாங்க அதிபரோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களோ அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே இந்த பாலமீன்மடு கடற்றொழிலாளர் 60 வீட்டுத்திட்ட மக்கள் பிரச்சனை, பாலமீன்மடு மீன் சந்தை புனரமைப்பு, இறங்குதுறை புனரமைப்பு மற்றும் மட்டக்களப்பு பிரதான வாவியை கடற்றொழிலாளர்களின் நலனுக்காக அகலப்படுத்தி ஆழப்படுத்தி புனரமைக்க வேண்டியது தொடர்பாக ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மாவட்ட அபிவிருத்தி குழுவில் பேச வேண்டியது உங்கள் கடமை” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |