சற்றுமுன்னர் அதிரடியாக கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ச..!(LIVE)
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவில் இன்று (04-09-2026) காலை முன்னிலையாகிய நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கைது செய்யப்ட்ட நாமல் ராஜபக்ச, புதுக்கடை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சர்ச்சைக்குரிய ஏர்பஸ்விமானக் கொள்முதல் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகள் நிமித்தமே இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று காலை ஆணைக்குழுவில் முன்னிலையாவதற்கு முன்னர் கருத்து தெரிவித்திருந்த நாமல் ராஜபக்ச, வரும் செப்டம்பர் 12 ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட எதிர்ப்பு பேரணிக்கு முன்னர் தன்னைக் கைது செய்து சிறையிலடைக்க அரசாங்கம் முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.
அரசாங்கம் அச்சமடைந்து அடக்குமுறையின் மூலம் எதிர்க்கட்சியின் குரலை ஒடுக்க முயல்வதாகவும், இத்தகைய தடைகளால் தனது அரசியல் பயணத்தை நிறுத்த முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |