முக்கிய குற்றவாளியின் வழக்கு கோப்புகள் மாயம்! பத்து நீதிமன்ற ஊழியர்களிடம் வாக்குமூலம் பதிவு

CID - Sri Lanka Police Sri Lankan Peoples Sri Lanka Police Investigation Law and Order
By Dhilak Sep 03, 2026 07:39 PM GMT
Report

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான "குடு சலிந்து" என அழைக்கப்படும் சலிந்து மல்சித குணரத்னவுக்கு எதிராக பானந்துறை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த இரண்டு வழக்குக் கோப்புகள் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக ஏழு பெண் அதிகாரிகள் உட்பட பத்து நீதிமன்ற ஊழியர்களிடம் காவல்துறையினர் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாக பானந்துறை பிரிவு சிரேஷ்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

காணாமல் போன கோப்புகள்

காணாமல் போன கோப்புகளில் ஒன்று பானந்துறை வடக்கு பகுதியில் குடு சலிந்துவின் தூண்டுதலின் பேரில் நடந்ததாகக் கூறப்படும் கொலை வழக்கு தொடர்பானது என தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய குற்றவாளியின் வழக்கு கோப்புகள் மாயம்! பத்து நீதிமன்ற ஊழியர்களிடம் வாக்குமூலம் பதிவு | Kudu Salindu S Case Files Missing

மற்றொன்று குற்றப் புலனாய்வுத் துறையினால் (CID) பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கு தொடர்பானது என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஓகஸ்ட் 28 அன்று மனு மூலமாக நீதிமன்றத்தின் முன் இந்த வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சிஐடி அதிகாரிகளால் வழக்கு அறிக்கையைக் கண்டறிய முடியவில்லை.இதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையிலேயே வழக்குக் கோப்புகள் முழுமையாகக் காணாமல் போயிருப்பது தெரியவந்துள்ளது.

சிசிரிவி கமரா ஆய்வு

இந்தச் சம்பவம் தொடர்பாக பானந்துறை நீதவான் நீதிமன்றப் பதிவாளர் செப்டம்பர் 1 அன்று அளித்த முறைப்பாட்டை தொடர்ந்து, 'பி அறிக்கை' தாக்கல் செய்யப்பட்டு பானந்துறை பிரிவு குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் மேலதிக விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

முக்கிய குற்றவாளியின் வழக்கு கோப்புகள் மாயம்! பத்து நீதிமன்ற ஊழியர்களிடம் வாக்குமூலம் பதிவு | Kudu Salindu S Case Files Missing

நகல்களைப் பெறுவதற்காக இந்த ஆவணங்கள் ஓர் அலுவலக உதவியாளரிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் காப்பகத்தில் வைக்கப்பட்ட போதே காணாமல் போயுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிசிரிவி (CCTV) கமரா பதிவுகளை ஆய்வு செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

22வது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிரான எழுத்துப்பூர்வ வாதங்களுக்கான காலக்கெடு நிறைவு!

22வது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிரான எழுத்துப்பூர்வ வாதங்களுக்கான காலக்கெடு நிறைவு!

கற்பிட்டியில் கொடூரம்! கணவனால் எட்டு மாத கர்ப்பிணித் தாய் படுகொலை

கற்பிட்டியில் கொடூரம்! கணவனால் எட்டு மாத கர்ப்பிணித் தாய் படுகொலை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026