மௌலானாவை கருணா - பிள்ளையானுக்கு அறிமுகப்படுத்திய டக்ளஸ்! ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் பகிரங்கம்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த நேற்றைய நீதிமன்ற விசாரணையில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் முக்கிய விடயம் ஒன்றை வெளிப்படுத்தியுள்ளது.
அதன்படி சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸால் மேற்கண்ட விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான சமர்ப்பணங்களை முன்வைத்த திலீப பீரிஸ்,
சட்டத்துக்கு உட்பட்டவர்
இந்த விசாரணையில் பல நபர்களிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் முன்னாள் அமைச்சரான கதிரவேலு நிதியானந்த தேவாநந்தா எனப்படும் டக்ளஸ் தேவாநந்தாவிடமிருந்தும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், சிவநேசதுரை சந்திரகாந்தனின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான அசாத் மௌலானாவை கருணா மற்றும் பிள்ளையானுக்கு அறிமுகப்படுத்தியது டக்ளஸ் தேவாநந்தா என வெளிப்பட்டமையாகும்.
முந்திரி கூட்டுத்தாபனத்தின் தலைவராக இருந்த சங்கர் என்பவரிடம், அசாத் மௌலானாவை கருணா மற்றும் பிள்ளையானுக்குச் சந்திக்க வைக்குமாறு அவர் வழிகாட்டியுள்ளார்.
எனினும் டக்ளஸ் தேவாநந்தா அதனை மறுக்கிறார். நாங்கள் வாக்குமூலத்தைப் பெற்ற பின்னர் அவர் ஒரு ஊடகவியலாளர் சந்திப்பை நடத்துகிறார். அங்கேயும் நாங்கள் பெற்ற வாக்குமூலங்கள் தொடர்பாகக் குறிப்பிடுகிறார். அவ்வாறு செய்ய முடியாது. அவர் சட்டத்திற்கு உட்பட்டவர்.
பொய்யான கூற்றுகள்
அடுத்ததாக சங்கர் என்பவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. இவர் மிகவும் முக்கியமான சாட்சி. இவரே டக்ளஸ் தேவாநந்தாவின் அரசியல் பிரிவின் முன்னாள் பிரதானியாவார்.

அசாத் மௌலானாவை கருணா குழுவுடன் இணைக்குமாறு அறிவுறுத்தியது டக்ளஸ் தேவாநந்தா என்று இவர் வாக்குமூலம் அளித்துள்ளார். பிள்ளையானுடன் அசாத் மௌலானா தொடர்புகளைப் பேணியுள்ளார்.
2005 இல் சங்கர் அரசியலிலிருந்து விலகி, முழு குடும்பத்திற்குமாக சுவிட்சர்லாந்து விசா கோரியுள்ளார். அசாத் மௌலானா, சுரேஷ் சலே, கோட்டாபய ராஜபக்ச ஆகியோருடன் தொடர்புடையவர் எனக் கூறும் கூற்றுகள் பொய் எனக் கூறுகிறார்.
அவருக்குப் பொய்யான வாக்குமூலம் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் 2005, 2006 காலப்பகுதியிலேயே அசாத் மௌலானாவுக்கு அரசியல் புகலிடம் கிடைத்துவிட்டது" என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |