ஞானசார தேரர் காவி ஆடை விவகாரம்: மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
Galagoda Aththe Gnanasara Thero
Court of Appeal of Sri Lanka
Arrest
By Sindu
கலகொடஅத்தே ஞானசார தேரரின் காவி ஆடையை அகற்றுவதற்குச் சிறைச்சாலை அதிகாரிகள் எடுத்துள்ள தீர்மானத்தை வலுவற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை மீண்டும் நவம்பர் 18 ஆம் திகதி அழைப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (22) உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டுகளுக்காக ஞானசார தேரருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
குறித்த மனுக்கள் இன்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் அழைக்கப்பட்டன.
ஒத்திவைப்பு
இதன்போது முன்வைக்கப்பட்ட காரணங்களை பரிசீலித்த பின்னர், நீதிமன்றம் இந்த வழக்கை மீண்டும் நவம்பர் 18ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.

தீனியாவல பாலித தேரர் உள்ளிட்ட பிக்குகள் குழுவினரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி