யாழில் நெகிழ்ச்சி சம்பவம் - பேருந்தில் தவறவிட்ட நகை..! சாரதி - நடத்துநரின் நேர்மையான செயல்
கீரிமலை – பருத்தித்துறை வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தில் பயணி ஒருவர் தவறவிட்ட பெறுமதியான நகை கண்டெடுக்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பேருந்தில் நகை இருப்பதை அவதானித்த சாரதி மற்றும் நடத்துனர், அதனை பாதுகாப்பாக வைத்திருந்து உரிய முறையில் நகையின் உரிமையாளரிடம் கையளித்துள்ளனர்.
அவர்களின் நேர்மையான செயற்பாட்டைப் பாராட்டும் வகையில், வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையினால் கௌரவிப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
நேர்மையான செயற்பாடு
இந்நிகழ்வு 2026 செப்டெம்பர் 3ஆம் திகதி யாழ் வீதிப் பயணிகள் அதிகாரசபை அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் சூ. விமலேஸ்வரனால் சாரதி மற்றும் நடத்துனர் கௌரவிக்கப்பட்டனர்.
பொதுமக்களின் உடமைகளைப் பாதுகாத்து, உரியவரிடம் மீளக் கையளித்த இவர்களின் நேர்மையான செயற்பாடு, பொதுப் போக்குவரத்துச் சேவையில் பணியாற்றும் ஊழியர்களின் பொறுப்புணர்வுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 19 Evening