தமிழர் பகுதியில் பனை மரத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்! இளைஞன் பரிதாபமாக பலி
கிளிநொச்சி பகுதியில் மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதின் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் கிளிநொச்சி - உருத்திரபுரம் இந்துக் கல்லூரி பாடசாலைக்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி உதயநகர் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய புஷ்பராசா சமர்நிலவன் என்ற இளைஞனே குறித்த விபத்தில் பரிதாபகரமான உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனை
இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரம் நின்ற பனை மரத்துடன் மீது மோதி விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் படுகாயம் அடைந்த நிலையில் குறித்த இளைஞன் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பாக கிளிநொச்சி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 19 Evening