வலுவான தாழமுக்கம்: கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Department of Meteorology Weather Rain
By Sindu Oct 25, 2026 02:26 AM GMT
Report

வங்காள விரிகுடாவின் அந்தமான் தீவில் காணப்பட்ட தாழ் அமுக்கம் தீவிரமடைந்து வலுவான தாழ் அமுக்கமாக மாறியுள்ளது.

இது இன்று மேலும் தீவிரமடைந்து வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு மற்றும் கிழக்குப் பகுதியின் மத்தியுடன் இணைந்ததாக வலுவான தாழ் அமுக்கமாக மாறி மேற்கு - வடமேற்குத் திசையை நோக்கி நகர்ந்து செல்லும்.

இது நாளையளவில் மேலும் தீவிரமடைந்து ஒரு சூறாவளியாக மாறுவதுடன் நாளை மறுதினம் மேலும் தீவிரமடைந்து மிகப் பலமிக்க சூறாவளியாக வங்காள விரிகுடாவின் மேற்குப் பகுதியின் மத்தியில் காணப்படும்.

தனியார் ஹோட்டலில் இரகசிய சந்திப்பு: முகத்தை மூடியபடி சென்ற கஸ்ஸப்ப தேரர்

தனியார் ஹோட்டலில் இரகசிய சந்திப்பு: முகத்தை மூடியபடி சென்ற கஸ்ஸப்ப தேரர்

மீனவர்களுக்கு எச்சரிக்கை

இதனால் இலங்கைக்கு நேரடியான தாக்கம் இல்லாத போதிலும் நாட்டை ஊடறுத்து காற்று வீசுவதுடன் நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் சில தினங்களுக்கு மழைவீழ்ச்சி அதிகரித்தும் காணப்படும். ஆகையினால் கடற்றொழிலாளர்களை வங்காள விரிகுடாவின் ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பிராந்தியங்களுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகின்றனர்.

வலுவான தாழமுக்கம்: கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை | Cyclone Srilanka Fishers Warning Rain

மேலும் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படுகின்ற எதிர்கால எதிர்வு கூறல்களை கவனத்திற் கொண்டு செயற்படுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

சப்ரகமுவ, மேல், வடமேல், வட மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா மற்றும் அனுராதபுரம் மாவட்டத்திலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இப் பிராந்தியங்களின் சில இடங்களில் 100 mm இலும் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

ஐரோப்பாவை அதிரவைக்கும் பிரான்ஸ் போராட்டம்! ஏனைய நாடுகளிலும் பதற்றம்

ஐரோப்பாவை அதிரவைக்கும் பிரான்ஸ் போராட்டம்! ஏனைய நாடுகளிலும் பதற்றம்

பலத்த காற்று 

மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 - 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும். இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும்.

வலுவான தாழமுக்கம்: கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை | Cyclone Srilanka Fishers Warning Rain

இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

கடல் பிராந்தியங்களில்...

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 - 40 km வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

திருகோணமலை தொடக்கம் காங்கேசன்துறை, புத்தளம், கொழும்பு, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 - 60 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும்.

புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது சுமார் 2.0 - 2.5 m உயரத்திற்கு மேலெளக்கூடும்.

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் மணித்தியாலத்திற்கு 60 - 70 km வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

மொஹமட் சாலிஹீன்

செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் கனடா நாடாளுமன்றில் ஒலித்த குரல்

செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் கனடா நாடாளுமன்றில் ஒலித்த குரல்

ஐரோப்பாவை அதிரவைக்கும் பிரான்ஸ் போராட்டம்! ஏனைய நாடுகளிலும் பதற்றம்

ஐரோப்பாவை அதிரவைக்கும் பிரான்ஸ் போராட்டம்! ஏனைய நாடுகளிலும் பதற்றம்


  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024