ஐரோப்பாவை அதிரவைக்கும் பிரான்ஸ் போராட்டம்! ஏனைய நாடுகளிலும் பதற்றம்
பிரான்ஸில் இடம்பெரும் போராட்டமானது தற்போது ஐரோப்பாவின் ஏனைய நாடுகளுக்கும் பரவியுள்ளமை சர்வதேசத்தின் கவலைகளை தூண்டியுள்ளது.
இதன்படி பிரான்ஸுக்கு வெளியே பெல்ஜியம், அல்பேனியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளிலும் போராட்டங்கள் இடம்பெறுவதாக ஐரோப்பிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பிரஸ்ஸல்ஸில் , கல்வி முறையில் சிறந்த நிலைமைகளைக் கோரிப் போராடிய அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பாரிய மோதல்களும் ஏற்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு எதிரான பேரணி
மேலும், அல்பேனியத் தலைநகர் டிரானாவில் , அரசாங்கத்திற்கு எதிரான பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டதாகவும், அவர்களைக் கலைப்பதற்காகக் காவல்துறை கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதாகவும் கூறப்படுகிறது.

அத்தோடு, இத்தாலியின் மிலான் நகரில், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளுக்கு எதிராகத் திட்டமிடப்பட்டிருந்த போராட்டங்களுக்கு முன்னதாக, காவல்துறை மற்றும் இராணுவத்தினரால் கடுமையான அடக்குமுறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் சர்வதேச ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |