தனியார் ஹோட்டலில் இரகசிய சந்திப்பு: முகத்தை மூடியபடி சென்ற கஸ்ஸப்ப தேரர்
Sri Lanka
Sri Lankan political crisis
By Dharu
கொழும்பில் உள்ள ஒரு முக்கிய தனியார் ஹோட்டலில் இருந்து பௌத்த தேரர் ஒருவர் வெளியேறும் காணொளியும், முன்னாள் அமைச்சர் என சந்தேகிக்கப்படும் ஒருவரின் காணொளியும் தற்போது சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவி வருகின்றன.
இந்த காணொளிகள் குறித்து சமூக ஊடகப் பயனர்களிடையே பல்வேறு கருத்துக்களும் யூகங்களும் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.
காணொளியில் உள்ள தேரர், விகார மகாதேவி பூங்காவில் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டுள்ள கஸ்ஸப்ப தேரராக இருக்கலாம் என கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
சரத் வீரசேகர
எனினும் காணொளியில் உள்ள துறவியின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

காணொளியில் உள்ள மற்றொரு நபர், கஸ்ஸப்ப தேரரை ஆதரிக்கும் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகரவாக இருக்கலாம் என்றும் சமூக ஊடகங்களில் கருத்துகள் பரவி வருகின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்