கொழும்பில் அதிரடியாக கைது செய்யப்பட்ட பெண்
மட்டக்குளி பகுதியில் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு - மட்டக்குளி காவல்துறை பிரிவிற்குட்பட்ட சமித்புர பகுதியில் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது
35 வயதுடைய குறித்த பெண் சமிட்புர பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
நீதிமன்றத்தில் முன்னிலை
அவரிடம் இருந்து 1,000 போதை மாத்திரைகளையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகளின் பெறுமதி சுமார் ரூ.2 இலட்சம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் ஐந்தாம் இலக்கப் பிரிவின் அதிகாரிகள் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த போதைமாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபரான பெண் இன்று (4) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |