முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்றுமுன்னர் கைது!
புதிய இணைப்பு
முன்னாள் அமைச்சரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்றுமுன்னர் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலம் வழங்குவதற்காக ஆணைக்குழுவில் முன்னிலையான போதே கைது செய்யப்பட்டுள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டு
பொல்கொல்லயில் அமைந்துள்ள மகிந்த ராஜபக்ச அரங்கத்திற்கு கதிரைகளைக் கொன்வனவு செய்யும் போது உரிய கொள்முதல் நடைமுறைகளை மீறி செயற்பட்டதன் மூலம் அரசாங்கத்திற்கு 7,973,114 ரூபாய் நட்டம் ஏற்படுத்தியமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த நிலையில் ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
முதலாம் இணைப்பு
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று (04) காலை வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அந்த ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக முன்னர் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர் இவ்வாறு முன்னிலையாகியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |