நாட்டின் மொத்த எரிபொருள் இறக்குமதி செலவீனம்...! வெளியான தகவல்
Fuel Price In Sri Lanka
Ceylon Petroleum Corporation
Sri Lanka
By Shalini Balachandran
நாட்டின் மொத்த எரிபொருள் இறக்குமதி செலவீனம் 59.9 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு 2026 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில் இந்த அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
எரிபொருள் இறக்குமதி
இதனடிப்படையில் 2025 ஆம் ஆண்டின் ஜனவரி - ஜூலை காலத்தில் 2,265.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த எரிபொருள் இறக்குமதி செலவு, 2026 ஆம் ஆண்டின் அதே காலப்பகுதியில் 3,621.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான செலவு அதிகரித்தமையே இந்த உயர்வுக்கு முதன்மை காரணியாக அமைந்துள்ளது.
2026 ஜூன் மாதத்தில் 465 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவான மாதாந்த எரிபொருள் இறக்குமதி செலவு, ஜூலை மாதத்தில் 453 மில்லியன் அமெரிக்க டொலர்களாக சற்றே குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி