நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கும் சபாநாயகர்
தனக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் நான் எவ்வித அச்சமும் கொள்ளவில்லை என சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.
மாறாக நாடாளுமன்றத்தில் அது குறித்த உண்மைகளை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்துவதற்குக் கிடைத்த சிறந்த சந்தர்ப்பமாகவே அதைக் கருதுகின்றேன் எனவும் கூறியுள்ளார்.
சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவந்துள்ளது.
குறுகிய அரசியல்
இது குறித்து தனது நிலைப்பாட்டை தெரிவிக்கும் போதே சபாநாயகர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தனக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படுவது குறித்துத் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன். நாடாளுமன்றத்தில் இது குறித்த ஆரோக்கியமான விவாதமொன்று இடம்பெறும் போது, சபாநாயகர் என்ற ரீதியில் அனைத்து உண்மைகளையும் நாட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்தும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கும்.
வேலை வாய்ப்பு மேலும், அந்த விவாதம் எப்போது சபைக்கு வரும் என்று நான் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றேன்.
சில ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் காண்பிக்கப்படுவது உண்மையான கள நிலைமை அல்ல.
சில தரப்பினர் தங்களது குறுகிய அரசியல் மற்றும் தனிப்பட்ட நலன்களை முன்வைத்து மாத்திரமே இவ்வாறான பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்” என கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |